தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஜூலை 29, 2018

சம்பந்தன், மாவையுடன் ரெலோ தலைவர்கள் சந்திப்பு


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழ் அரசுக் கட்சி மற்றும் ரெலோ தலைவர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழ் அரசுக் கட்சி மற்றும் ரெலோ தலைவர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

திருகோணமலையில் உள்ள எதிர்கட்சி தலைவரின் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பில், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், திருகோணமலை மாவட்ட ரெலோ அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் நித்தியாநந்தன் ஆகியோரும், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்து கொண்டனர்