திங்கள், ஜூலை 09, 2018

ஐ.நாவில் புகார் அளித்த தமிழ் பெண்களுக்கு மிரட்டல் - பாதுகாப்பு வழங்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை

இலங்கையில் காணாமற்போனவர்களின் தமிழ் தாய்மார்கள் அறுவர் இப்போதைய ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவை அமர்வில் வாக்குமூலம் அளித்த பின் இலங்கை திரும்பும் போது அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆவன செய்யும் படி ஐநா மனிதவுரிமைப் பேரவையின் தலைவர் மேதகு தூதுவர் வொஜிஸ்லாவ் சக் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் காணாமற்போனவர்களின் தமிழ் தாய்மார்கள் அறுவர் இப்போதைய ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவை அமர்வில் வாக்குமூலம் அளித்த பின் இலங்கை திரும்பும் போது அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆவன செய்யும் படி ஐநா மனிதவுரிமைப் பேரவையின் தலைவர் மேதகு தூதுவர் வொஜிஸ்லாவ் சக் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளில் சிறிலங்காவில் பத்தாயிரக் கணக்கானோர் காணமற்போயுள்ளனர். அவர்களில் சிலரின் தாய்மார்களான இவர்கள் தங்கள் பிள்ளைகளைக் கண்டுபிடிக்க உதவி கேட்டு வருகிறார்கள். காணாமற்போனவர்களில் பலர் ஒன்பதாண்டுகளுக்கு முன் போரின் முடிவில் அவர்களின் குடும்பத்தினரால் சிறிலங்கப் பாதுகாப்புப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் ஆவர். கடந்த காலத்தில் கிட்டத்தட்ட 18 ஆயிரம் தமிழர்கள் காணாமற்போயிருப்பதாக நம்பகமான செய்திகள் உள்ளன. இத்தனைப் பேர் காணாமற்போயிருந்தும் ஒரே ஒரு இராணுவ அதிகாரி கூட நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருப்பவர் அதன் ஐக்கிய நாடுகள் பிரதிநிதி திரு சுகிந்தன் முருகையா ஆவார்.

காணாமற்போனவர்களின் தாய்மார்களில் ஆறு பேர் ஐநா மனிதவுரிமைப் பேரவையின் நடப்பு அமர்விற்கு வருகை தந்து பேரவையின் பல்வேறு அரங்குகளிலும் பேசவுள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களுக்கும், காணாமற்போன கிட்டத்தட்ட 18 ஆயிரம் பேருக்கும் விடுதலை பெற்றுத்தர வேண்டும் அல்லது அவர்கள் உயிரிழந்த சூழ்நிலைகள் குறித்துத் தகவல் பெற்றுத்தர வேண்டும் என்று உறுப்பரசுகளுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுக்கவுள்ளனர். காணாமற்போனவர்களின் குடும்பத்தார் தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடுவதற்கென்று கூட்டாக ஒரு குழு அமைத்துள்ளனர்.

காணாமற்போனவர்களின் தாய்மார்கள் ஐநா மனிதவுரிமைப் பேரவையின் துணை நிகழ்வுகளில் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்த போது சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளும், சிறிலங்கா இராணுவ உளவுத் துறை அதிகாரிகள் பலர் அவர்களின் உரையில் முரட்டுத்தனமாகக் குறுக்கிடவும், உரக்கக் கத்தி அவர்களை வசை கூறவும் அச்சுறுத்தும் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தவும் செய்தனர். இந்த அச்சுறுத்தல்களால் தாய்மார்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகி அவர்களில் ஒருவர் ஐநா மனிதவுரிமைப் பேரவையில் மயக்கமுற்று, ஜெனிவாவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த அதிகாரிகள் காணாமற்போனவர்களின் தாய்மாரைப்