தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஜூலை 19, 2018

கல்மடுக் குளத்தில் சடலம் மீட்பு


கல்மடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற 63 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை இன்று காலை, சடலமாக மீட்கப்பட்டார். வடமராட்சி - கரவெட்டியைச் சேர்ந்த சுந்தரம் புலேந்திரன் என்பவரே, சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கல்மடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற 63 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை இன்று காலை, சடலமாக மீட்கப்பட்டார். வடமராட்சி - கரவெட்டியைச் சேர்ந்த சுந்தரம் புலேந்திரன் என்பவரே, சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கிளிநொச்சி - கல்மடு குளத்துக்கு, நேற்று மாலை தொழிலுக்காகச் சென்றவர்களில் சுந்தரம் புலேந்திரன் என்பவர் வீடு திரும்பவில்லையென, அவரது உறவினர்களால், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, இன்று அதிகாலை, குளக்கரையில் சடலமொன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது, சுந்தரம் புலேந்திரனின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன