தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஜூலை 29, 2018

மடுத் திருத்தலத்துக்கு திடீரென குடும்பத்துடன் சென்ற ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் திடீரென மன்னார் -மடு தேவாலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ மற்றும் மடு தேவாலயத்தின் நிர்வாகி அருட் தந்தை எமிலியானு பிள்ளை ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர். கொழும்பு பேராயர் கர்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட அருட் தந்தைகள் சமயக் கிரியைகளை மேற்கொண்டு ஆசீர்வாதங்களை வழங்கினர்.

சமயக் கிரியைகளைத் தொடர்ந்து தேவாலயத்தை சுற்றிப் பார்வையிட்ட ஜனாதிபதி அங்கு இடம்பெற்றுவரும் அபிவிருத்திப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். அனைத்து இனங்களையும் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் இன்றைய தினம் தேவாலயத்திற்கு வருகை தந்திருந்ததுடன், அம்மக்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்