தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஜூலை 23, 2018

ஐ.தே.கயும் , கூட்டமைப்பும் , ஜே.வி.பியும் இணைந்து ஜனாதிபதிக்கு எதிராக ஓர் சதியை கொண்டுவந்துள்ளதாக ஓர் ஊடகம் தெரிவிப்பதில் உண்மை இல்லை எம்.ஏ.சுமந்திர

ஐ.தே.கயும் , கூட்டமைப்பும் , ஜே.வி.பியும் இணைந்து ஜனாதிபதிக்கு எதிராக ஓர் சதியை கொண்டுவந்துள்ளதாக ஓர் ஊடகம் தெரிவிப்பதில் உண்மை இல்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்தெரிவித்தார்.

தமிழ் அரசுக் கட்சியின் உத்தியோக பூர்வ ஏடான சுதந்திரன் பத்திரிகையின் அலுவலகத் திறப்புவிழா நேற்றைய தினம் சாவகச்சேரியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

கடந்த இரு நாட்களாக நாட்டில் அரசியல் அமைப்பு பணி தொடர்பிலும் புரளி கிழப்பிவிடப்பட்டு நாடாளுமன்றில் அதற்கு பதிலளித்தோம். அதனை ஊடகங்கள் தெளிவாக பிரசுரித்தமை மிக முன்னேற்றமான செயல்பாடு. இருப்பினும் ஓர் இலத்திரணியல் ஊடகம் மட்டும் புரள்வாகவே செய்தியிட்டது.

அதாவது கூட்டரசை கவிழ்க் வேண்டும். என்ற என்னத்தில் இரு தலைவர்களிடமும் சந்தேகத்தை எழுப்பவே இந்த முயற்சி இடம்பெற்றது. அதாவது ஜனாதிபதியை பதவி இறக்க இறக்கும் யோசணையை ஐ.தே.கயும் கூட்டமைப்பும் , ஜே.வி.பியும் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தனர்.

உண்மையில் புதிய அரசியல் யாப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறமையை ஒழுக்கும் முயற்சியை குறிப்பிடுகின்றனர். அதாவது சுகயீனம் காரணமாக ஜனாதிபதி செயல்படுவது கடினமாக கானப்பட்டால் பிரதமர் , எதிர்க்கட்சித் தலைவர் , சபாநாயகர் மூவரும் இனங்கினால் மாற்றலாம் என ஒரு நோசணை உண்டு. இருப்பினும் இது மட்டும்தான் ஒரு யோசணை அல்ல. அதில் பல யோசணையில் இதுவும் ஒன்று. இவைகூட இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை . ஆனால் அதனை சதி என ஓர் ஊடகம் கூறுகின்றது.

புதிய சுதந்திரன் தமிழ் மக்களின் விடிவிற்காக ஓர் பாரிய பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் என சுதந்திரன் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழர்களின் நியாமான கோரிக்கையை வெளிக்கொணர்ந்து தமிழர்களின் கோரிக்கையை அடையபாடுபடும் ஓர் பத்திரிகையாகவும் தமிழ் மக்களின் தேவைக்காக ஓங்கி ஒலிக்கும் பத்திரிகைகளில் சுதந்துரனும் ஓர் இடத்தை மீண்டும் பிடிக்கவேண்டும்

தமிழர்களின் உரிமையை பெற பாடுபடும் ஓர் பத்திரிகையாக செயல்படும். சில ஊடகம் தமது தேவைற்காக மாற்றியமைக்கும் செயலிலும் ஈடுபடும். நியாயமான குறிக்கோலைப்பெற முயலும் கூட்டமைப்பு முயலும் இந்த நிலையில் அதனை உடைக்க முனைகதைகளின் மத்தியில் பலர் செயல்படும் நிலையில் . கடந்த கால ஆட்சியில் மனித உரிமை மறுக்கப்பட்ட நிலையில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் 2012 ம் ஆண்டு அரச தரப்பில் லஞ்சம் பெற்றே மனிதப் படுகொலையை மூடி மறைத்தமை தெரியவந்துள்ளது.

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நியாயமான கோரிக்கையை ஒலிப்பதனை தடுக்கவும் திசை திருப்பவும் பலர் லஞ்சம் பெற்ற வரலாறும். உண்டு . எமது அவலத்தை மறைக்கவும் எம் குரலை நசுக்கவும் லஞ்சம் வழங்கினர். என

மட்டக்களப்பு மாவட்ட சிறிநேசன் .

ஊடகத்தின் பணி மிக முக்கியம் செய்தியில் உண்மையை வெளியிடும் ஊடகத்தை வணங்கும் அதேநேரம் வடிகட்டிய பொய்யை வெளியிடும் ஒரு சில ஊடகமும் உண்டு. தமிழ்த் தேசிய உணர்வை தமிழ் ஊடகங்கள் முன் கொண்டு செல்வார்கள் என நம்புகின்றோம். கூட்டமைப்பு மற்றும் தலைவர்கள் தொடர்பில் தவறான செய்திமூலம் விமர்சணம் செய்பவர்களும் உண்டு.

தெற்கில் ஓர் இலத்திரணியல் ஊடகமும் வடக்கில் ஓர் அச்சு ஊடகமும் குறித்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் .

ஊடகத்தின் பணி மிக முக்கியம் செய்தியில் உண்மையை வெளியிடும் ஊடகத்தை வணங்கும் அதேநேரம் வடிகட்டிய பொய்யை வெளியிடும் ஒரு சில ஊடகமும் உண்டு. தமிழ்த் தேசிய உணர்வை தமிழ் ஊடகங்கள் முன் கொண்டு செல்வார்கள் என நம்புகின்றோம். கூட்டமைப்பு மற்றும் தலைவர்கள் தொடர்பில் தவறான செய்திமூலம் விமர்சணம் செய்பவர்களும் உண்டு. என்றார்