தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஜூலை 24, 2018

யாழ். மாநகர சபையில் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் தில்லுமுல்லு! - விளக்கமளிக்க உத்தரவு


யாழ்ப்பாணம் மாநகர சபையின் 4 ஆவது அமர்வில் கலந்து கொள்ளாமல், வரவுப் பதிவேட்டில் ஒப்பமிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் தொடர்பாக பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மாநகர ஆணையாளரிடம் விளக்கம் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 4 ஆவது அமர்வில் கலந்து கொள்ளாமல், வரவுப் பதிவேட்டில் ஒப்பமிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் தொடர்பாக பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மாநகர ஆணையாளரிடம் விளக்கம் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 4 ஆவது அமர்வு கடந்த ஜூன் மாதம் 26ம் திகதியும் அதன் தொடர்ச்சி 29ம் திகதியும் யாழ்ப்பாணம் மாநகர சபையில் இடம்பெற்றது. குறித்த இரு நாள்களும் சபைக்கு சமூகமளிக்காத அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் வரவுப்பதிவேட்டில் ஒப்பமிட்டுள்ளார். குறித்த உறுப்பினர் ஒப்பமிட்டமை தொடர்பில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதன் அடிப்படையில், பிராந்திய ஆணையாளர் தற்போது மாநகர ஆணையாளரிடம் இது தொடர்பில் விளக்கம் கோரியுள்ளார்.