தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஜூலை 19, 2018

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டும் .!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நல்லாட்சியுடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ் தேசிய
கூட்டமைப்பு, அரசாங்கத்திற்கு தீர்க்கமான அழுத்தம் கொடுக்க வேண்டும் என, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு சென்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் உறுப்பினர்கள் நேற்று எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தனர்.
குறித்த சந்திப்பை தொடர்ந்து குறித்த அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேலினால் கையளிக்கப்பட்ட கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கூட்டமைப்பு அக்கறையுடன் செயற்பட்டு வருவதை தாம் அறிவதாகவும், யுத்தம் நிறைவடைந்த குறுகிய காலத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 12 ஆயிரம் போராளிகளை விடுவித்திருந்தார் என கடித்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால், சிறுபான்மை மக்களின் பூரண ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னை கொலை செய்ய முயற்சித்தவரை தவிர வேறு எவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முன்வரவில்லை என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்துடன் இணக்க அரசியலில் ஈடுபட்டுவரும் கூட்டமைப்பு, பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்கி தமிழ் அரசியல் கைதிகளை வெகுவிரைவில் விடுதலை செய்வதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கடித்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அதனை குறித்த காலவரையறைக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கியுள்ள கடித்தில் சுட்டிக்காட்டியுள்ளது.