தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஜூலை 25, 2018

பிரபாகரனின் தாத்தா பாட்டிக்கும் நஷ்டஈடு? நாடாளுமன்றில் நடக்கப்போவது என்ன?


ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றுக்கு கொண்டுவரப்படவுள்ள சட்டமூலத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்றிலும், நாடாளுமன்றுக்கு வெளியிலும் போராட்டங்களை நடத்த உள்ளதாக சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,நாட்டில் மிகவும் கஸ்டத்துக்கு மத்தியில் வாழும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட வரியைக் கொண்டு புலிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் வகையிலேயே ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றுக்கு கொண்டுவரப்படவுள்ள சட்டமூலம் அமைந்துள்ளது.

வடக்கு - கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் போது காணாமல் பொனோருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகளை “இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகம்” கொண்டுள்ளது.

எனவே நாட்டில் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் வாழும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட வரியை புலிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கையே இதுவாகும் என குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன்மூலம் பலன் பெறப்போவது யார்? விடுதலைப்புலிகளின் உறவினர்கள் மற்றும் பிரபாகரனின் தாத்தா பாட்டிக்கும் நஷ்டஈடு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே குறித்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம், மேலும் அதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றுக்கு வெளியிலும் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம் எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.