தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஜூலை 29, 2018

திடீரெனப் பணக்காரர்களாக மாறிய சிறைச்சாலை அதிகாரிகள்!

சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் திடீரென பணக்காரர்களாக மாறியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உதவி அதிகாரிகள் முதல் அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும் வருடாந்தம் தமது சொத்து மதிப்புக் குறித்த விபரங்களை ஒப்படைக்க வேண்டும். எனினும் அவர்கள் பொய்யான தகவல்களையே சமர்ப்பிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரிகள் நியமனம் பெற்ற பின்னர் கொள்வனவு செய்த வாகனம் உள்ளிட்ட சொத்துகள் தொடர்பில் அவர்கள் தமது சொத்து மதிப்புக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அவர்கள் அந்த சொத்துகளை தமது பிள்ளைகள் மற்றும் மனைவியின் பெயரில் கொள்வனவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கம்பஹா மற்றும் கொழும்பு ஆனந்த ராஜகருணா மாவத்தை ஆகிய இடங்களில் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் சொத்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.