தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஜூலை 27, 2018

கட்டுநாயக்கவில் விமானப் பயணிகளுக்கு ஈ- கார்ட் முறை அறிமுகம்

பயணிகளுக்கு ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக ஈ காட் (E-Card) முறை அமுல்படுத்தப்பட உள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்குப் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் மற்றும் குடியகல்வு குடிவரவு அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

கட்டுநாயக்க விமான சேவைகள் அதிகார சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், இதற்கென விமான நிலையத்தில் அமைக்கப்படும் ஈ-கேட்டைப் பயன்படுத்தி விமான நிலைத்திற்குள் பிரவேசிக்க முடியும், விமான நிலையத்தில் இருந்து துரிதமாக வெளியேறவும் முடியும் என குறிப்பிட்டார்.

இதேவேளை, உள்நாட்டு விமானப் பயணங்களை ஆரம்பிக்கத் தேவையான துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன. நேபாளத்தைப் போன்று வளர்ச்சி கண்ட உள்நாட்டு விமானசேவையை ஆரம்பிப்பது இலக்காகும். இதற்கான வசதிகளும், ஒடுபாதைகளும் ஏற்படுத்பத்தப்பட இருக்கின்றன. மட்டக்களப்பு, சிகீரிய போன்ற பிரதேசங்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானசேவை ஆரம்பிக்கப்பட இருக்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.

இ-பாஸ்போட் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென விசேட குழுவும் அமைக்கப்பட இருக்கிறது. இதில் ஏற்பட்ட தாமதித்தினால் இந்த ஈ காட் (E-Card ) முறைமை அறிமுகப்படுத்தப்படுகிறது என்றும் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்