தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஜூலை 23, 2018

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது? -

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது? - இலங்கை அரசு பதில் வழங்க வேண்டும் ; பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ­ ஷக் கோல்ட்ஸ்மித்
இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றி இலங்கை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினரான ­க் கோல்ட்ஸ்மித் கோரிக்கை விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிக ழ்வை முன்னிட்டு அவர் விடுத்திருந்த செய்தி யில், இலங்கையின் சிவில் யுத்த த்தின் இறு தியில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை பிரித் தானியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளி லும் செறிந்துவாழும் தமிழர்கள் நினைவுகூ ர்ந்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

இலங்கையில் இடம்பெற்ற போரின் இறு திக் காலப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள், இலங்கை அரச படையினரால் கொலை செய்யப்பட்டதாக தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினரான ஷக் கோல்ட்ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போரில் உயிர்தப்பியவர்களின் கருத்துக்களை நாம் கேட்க வேண்டும் என வும் குறிப்பாக தாய், தந்தையர், சகோதர ர்கள், சகோதரிகள், என காணாமல் ஆக்கப்ப ட்டவர்களின் உறவினர்களின் கருத்துக்க ளுக்கு செவிசாய்க்க வேண்டும் அவர் கூறியுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் முடிவில், சிறிது காலம் சிறையில் வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பலர் இலங்கை இராணுவத்திடம் தமது உற வுகளைக் கையளித்திருந்தார்கள் எனவும் ஷக் கோல்ட்ஸ்மித் குறிப்பிட்டார்.

அந்த தருணமே அவர்கள் இறுதியாக தமது உறவுகளைப் பார்த்திருந்தனர் என வும் ஒன்பது ஆண்டுகள் கடந்தும் கூட இலங்கை இராணுவம் அவர்களுக்கு என்ன நடந்து என்ற பதிலை வழங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கம், தமது பிள்ளை களை விடுவிக்க வேண்டும் என கோரி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் போராடும் மக்களுக்கு ஆதரவை வழங்குவ தாகவும் தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினரான ஷக் கோல்ட்ஸ்மித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.