தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஜூலை 17, 2018

எஸ்.பி.கே. செய்யாத்துரை வீட்டின் சுவற்றை இடித்து சோதனை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழமுடிமன்னார் கோட்டையில் எஸ்.பி.கே. குழுமத்தின் உரிமையாளர்
செய்யாத்துரை வீட்டின் சுவற்றை இடித்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.  

 எஸ்.பி.கே. குழுமத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட பண்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

தமிழக நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் எஸ்.பி.கே. நிறுவன உரிமையாளர் செய்யாதுரை மற்றும் அவரது மகன்கள் கருப்பசாமி, நாகராஜ், பாலசுப்பிரமணி, ஈஸ்வரன்  ஆகியோர் மீது பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் வந்தன.   இதையடுத்து எஸ்.பி.கே. நிறுவனத்தின் 30க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.   நேற்றைய சோதனையில் கணக்கில் காட்டப்படாத 180 கோடி ரொக்கப்பணமும், 150 கிலோ தங்கமும் சிக்கியதாக தகவல்.   மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த பணத்தையும், பெட்டி பெட்டியாக அடிக்கி வைக்கப்பட்டிருந்த தங்கத்தையும் பார்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.  

நேற்றைய சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் அருப்புக்கோட்டையில் செய்யாதுரை மற்றும் அவரது மகன்கள் பாலசுப்பிரமணி, கருப்பசாமி ஆகியோரிடம் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2வது நாளாக இன்றும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   இன்றைய சோதனையில் செய்யாத்துரை வீட்டின் சுவற்றை இடித்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

நேற்றைய சோதனையில் சென்னையில் கார் பார்க்கிங்கில் மட்டும் 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்தே வீட்டின் சுவற்றையும் இடித்து சோதனை நடைபெற்றுள்ளது