தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஜூலை 27, 2018

ஒக்ரோபரில் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மற்றொரு தீர்மானம்?

வரும் ஒக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று எச்சரித்துள்ளார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா.

இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதால், இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தம் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்