தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஜூலை 20, 2018

முதலமைச்சருக்கு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு


வட மாகாண சபையின் விடேச அமர்வில் கேட்காத தனது உரையினை மீளக்கேட்கும் வகையில் பகிரங்க விவாதமொன்றிற்கு எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கோரிக்கைவிடுத்துள்ளார்.

வடமாகாணசபையின் நிறைவேற்றுச் செயற்பாடுகள் இன்று முடங்கிய நிலையில் உள்ளது. இவ்வாறாக அதன் செயற்பாடுகளை முடங்கவிடாது வட மாகாண சபையின் அமைச்சர் சபை தொடர்பில் நீதிமன்றத்தீர்ப்பு தொடர்பாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை என்ற விடயப் பரப்பில் விவாதித்து தீர்வொன்றைக் காண்பதற்காக மாகாண சபையின் விசேட அமர்வு ஒன்று கடந்த 16ம் திகதி அன்று கூட்டப்பட்டதாக தவராசா விளக்கமளித்துள்ளார்.

அக்கூட்டத்தில் பங்குபற்றி அங்கு விவாதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட விடயங்களிற்குத் தகுந்த பதிலளிக்காமல் கூட்டத்தையே புறக்கணிப்பு செய்துவிட்டு ஊடகங்களிற்கான பதிலென்று முதலமைச்சர் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருப்பதாகவும் சி.தவராசா கவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் தம்மால் எழுப்பப்படும் கேள்விகளிற்கு அவரினால் மக்களிற்கு நேர்மையானதும் உண்மைத்துவமானதுமான பதில் அளிக்க முடியுமாயின் அவரைப் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பதாகவும் தற்போது மாகாண சபையில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக மட்டுமல்ல, கடந்த நான்கு வருடம் ஒன்பது மாதங்களாக மாகாண சபையின் நிறைவேற்று செயற்பாட்டின் வினைத்திறனின்மை தொடர்பாகவும் மக்களிற்குப் பதிலளிக்கும் முகமாகவும் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பதாகவும் தவராசா தெரிவித்துள்ளார்.