வியாழன், ஜூலை 12, 2018

மொட்டு சின்னத்துடன் உருவானது கூட்டு பொதுஜன பெரமுன!

கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் இணைத்து, கூட்டு பொதுஜன பெரமுன என்கிற பலமிக்க புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணி, மொட்டு சின்னத்தில் எதிர்வரும் தேர்தல்களில் களமிறங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தலைமையில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. இதன்போதே, அவ்வணியின் அனைத்துக் கட்சி தலைவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்