தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, ஜூலை 21, 2018

மாகாண சபைத் தேர்தலில் சகல தமிழ் கட்சிகளும் பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும்!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட உள்ளன. “எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சார்பில் அதி உச்சபட்ச ஆசனங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து ஒரே அணியில் போட்டியிட வேண்டும்” என கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அதற்கிணங்க எதிர்வரும் 20ஆம் திகதி மட்டக்களப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடனும், 21ஆம் திகதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனும் (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்), 22ஆம் திகதி வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடனும் (ரெலோ) மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடனும் (ஈ.பி.ஆர்.எல்.எப்) கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் சந்திப்புகள் நடைபெறவுள்ளதாக கிழக்குத் தமிழ் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு செயலாளர் வ.பரமகுருநாதன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஏனைய கட்சிகளுடனும் சந்திப்புகள் நடைபெற்று இம்மாத முடிவுக்குள் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற உத்தேசிக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.