www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

ஞாயிறு, ஜூலை 15, 2018

விக்னேஸ்வரனுடன் இணையப் போகிறாராம் விஜயகலா; சிங்கள ஊடகம் கூறுகிறது

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா
மகேஸ்வரன் ஆகியோர் இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை உருவாகவுள்ளனர் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பிலான ஆரம்ப கட்ட பேச்சுக்களை முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் நடத்தியிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
வடமாகாண முதலமைச்சர் தவிர, மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் இந்தப் புதிய கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்னதாக புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்த் தரப்பினர் மற்றும் அமைப்புக்களை சந்திப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தீர்மானித்திருப்பதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.