சனி, ஜூலை 07, 2018

பிரபாகரனே வந்தாலும் வடக்கு மக்கள் ஆயுதம் ஏந்த மாட்டார்கள்;மனோ கணேசன்

வடக்கு மக்களிடையே பிரபாகரனே எழுந்து வந்து மீண்டும் ஆயுதத்தை கையில் கொடுத்தாலும், அந்த மக்கள்
அவரை அடித்துத் துரத்துவார்கள் என நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இதற்காக, அங்கு பொலிஸாரோ இராணுவமோ செல்ல வேண்டியும் ஏற்படாது எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என விஜயகலா மஹேஷ்வரன் தெரிவித்துள்ள அறிவிப்பு குறித்து நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்  கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக்  குறிப்பிட்டார்