செவ்வாய், ஜூலை 10, 2018

இலங்கை அகதி சிறுவன்! சடலமாக மீட்பு அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

தமிழகம் – திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 6 வயது சிறுவன் அப்பகுதியில்
உள்ள குவாரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சந்திரதாசன் என்பவரின் மகன் 6 வயதான கௌதம்இ இந்நிலையில்இ கௌதமை அனுசன் என்பவர் வெளியில் அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் வீடு திரும்பிய அனுசன்இ கௌதமை காணவில்லை என சந்திரதாசனிடம் தெரிவித்துள்ளார். பின்னர் சந்தேகத்தின் பேரில் அனுசன் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது முகாம் அருகில் உள்ள குவாரியில் இருந்து கௌதமின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அனுசனை கைது செய்த பொலிஸார் கௌதம் அடித்து கொலை செய்யப்பட்டாரா ? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.