தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, ஜூலை 14, 2018

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தின் அமர்வு! - எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடந்தது

யாழ்ப்பாணத்தில், இன்று காணாமற் போனோர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த, காணாமற் போனோரின்
உறவினர்களுடனான சந்திப்பு பெரும் குழப்பத்துக்கு மத்தியில் இடம்பெற்றது. யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் காணாமல் போனோர் அலுவலகம், ஏற்பாடு செய்திருந்த இன்றைய சந்திப்பிற்கு காணாமற் போனோரின் உறவினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு மண்டபத்திற்கு வெளியேயும், உள்ளேயும், போ


ராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில், இன்று காணாமற் போனோர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த, காணாமற் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பு பெரும் குழப்பத்துக்கு மத்தியில் இடம்பெற்றது. யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் காணாமல் போனோர் அலுவலகம், ஏற்பாடு செய்திருந்த இன்றைய சந்திப்பிற்கு காணாமற் போனோரின் உறவினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு மண்டபத்திற்கு வெளியேயும், உள்ளேயும், போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

காணாமல் போனோர் அலுவலகம், தேவையில்லை என்றும் இது ஏமாற்றும் வித்தை என்றும் தெரிவித்து, இன்றைய சந்திப்பை புறக்கணித்து ஒரு பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனாலும் இன்னொரு பகுதி மக்கள் அந்த அலுவலகத்தினூடான சந்திப்பில் கலந்து கொண்டு தமது பிரச்சனைகள், தேவைகளைத் தெரிவித்திருந்தனர். இதனால், பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இன்றைய அமர்வு இடம்பெற்றது.