தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஜூலை 26, 2018

முசாபர்பூர் விடுதி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சிபிஐ விசாரணைக்கு நிதிஷ்குமார் உத்தரவு

முசாபர்பூர் விடுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டு உள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூரில்  உள்ள விடுதி ஒன்றில் சுமார் 44 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் கண்ணீர் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

அரசின் நிதியுதவி பெற்று செயல்பட்டு வரும் இந்த விடுதியில் தங்கியிருந்த 44 சிறுமிகளில் 29 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதாக தெரியவந்தது. விடுதியில் இருப்பவர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளில் சிலருக்கு கரு உருவாகியுள்ளது,  அதனை கலைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடரபாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த பாலியல் துஷ்பிரயோகம்  விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி . ரஞ்சித் ரஞ்சன் பேசினார்.இதற்கு பதில் அளித்த  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநில அரசு பரிந்துரைத்தால்  சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு அனுமதிக்கும் என்று கூறினார்.

இந்த நிலையில் பீகார் மாநில முசாபர்பூர் விடுதி  பாலியல் துஷ்பிரயோகம் குறித்த விசாரணையை  சிபிஐக்கு மாற்ற மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த வழக்கை  சிபிஐயிடம் ஒப்படைக்க  தலைமை செயலாளர்,  போலீஸ் டிஜிபி, மற்றும் பிரதம செயலாளர் ( உள்துறை) ஆகியோருக்கு உத்தரவிட்டு உள்ளார்.