தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஜூலை 29, 2018

யாழ். பிரதி மேயர் அச்சுறுத்தினார் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர் முறைப்பாடு!

யாழ்.மாநகர சபை பிரதி மேயரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான துரைராஜா ஈசன், தன்னை அச்சுறுத்தினார் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த விஸ்ணுகாந்தன் என்பவர் இன்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்.மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான வி. மணிவண்ணனுடன் இணைந்து தான் கொழும்புத்துறை பகுதிகளில் வீதி முன் விளக்குகளை பொருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அது தொடர்பிலையே தன்னை பிரதி மேயர் அச்சுறுத்தினார் எனவும் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.