தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஜூலை 30, 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துப் பங்காளிக் கட்சிகளையும் ஓரணியில் திரட்ட வேண்டும்- ரெலோ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர்
மாவை.சோ.சேனாதிராஜா ஆகியோரை ரெலோ அமைப்பின் ஆறு பிரதிநிதிகள் திருகோணமலையில் நேற்றுமுன்தினம் மாலை சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பில் பல விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் ஆராய்ந்துள்ளனர். அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்பட வேண்டும் என்று ரெலோ அமைப்புக் கோரியுள்ளது. அதற்கு சம்பந்தன் இணங்கியுள்ளதுடன், புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவைக் கூட்டுமாறு ரெலோ அமைப்புக் கேட்டுக் கொண்டுள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி கொழும்பில் அந்தச் சந்திப்பை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட வரப்போகின்ற தேர்தல்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துப் பங்காளிக் கட்சிகளையும் ஓரணியில் திரட்ட வேண்டும் என்று ரெலோ கோரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கான கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னரே அறிவிக்க வேண்டும் என்றும் ரெலோ அமைப்பு இந்தச் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தச் சந்திப்பில் ரெலோ சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலர் ந.சிறீகாந்தா, நிர்வாகச் செயலர் நித்தி மாஸ்ரர், வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.