தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, ஜூலை 21, 2018

சுவிசில் மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது

வதிவிட அனுமதி இன்றி சட்டத்துக்கு புறம்பான முறையில் நாட்டில் இருந்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரின் மூன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், சுவிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அப்பத்துரை சாந்தருபன்(38), றேமன் ஜோசப் கெவின் டெரிப்(31), நவரட்ணம் சங்கீதன்(24) ஆகியோரே ஆகும்.

இவர்கள் தற்போது சூரிச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாக தெரியவருகின்றது.

இவர்கள் விரைவில் நாடுகடத்தப்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.