தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஜூலை 26, 2018

விமானதில்விளையாட்டு வீராங்கனைகுழந்தை பெற்று குறைமாத சிசுவை வீசியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மணிப்பூர் தலைநகர் இம்பா இருந்து, கவுகாத்தி வழியாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் ஆசியா விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. அந்த விமானம் தரை இறங்குவதற்கு முன்பாக, விமான ஊழியர் ஒருவர் கழிவறைக்கு சென்றார். அப்போது குறை மாதத்தில் கரு ஒன்று ரத்தக்கறையுடன் அங்கு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து, விமான பணியாளர்களுக்கும், விமான மேலாளருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. 

பின்னர் விமானம் தரையிறங்கியதும் அங்கு வந்த போலீசார், யாரையும் கீழே இறங்க விடாமல் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 45 நிமிடங்கள் கழித்து ஆண் பயணிகள் மட்டும் முதலில் விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் நடந்த நெடுநேர விசாரணையில் 19 வயது விளையாட்டு வீராங்கனை ஒருவர் சிக்கினார். அவர் தான் இந்த கருவை பிரசவித்தார் என்பது தெரிய வந்தது. ஆனால், அவர் குறித்து எந்த தகவலையும் போலீசார் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விமான நிலைய போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தீவிர விசாரணைக்கு பின் 19 வயது விளையாட்டு வீராங்கனை விமான கழிவறையில் குழந்தை பெற்று குறைமாத  சிசுவை வீசியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. என கூறினார்

ஏர் ஆசியா விமான நிர்வாகம் தரப்பில், 'விமான கழிவறையில் சிசு வீசப்பட்டது தொடர்பாக விசாரித்து வருகிறோம். இதனால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்' என்று கூறப்பட்டு உள்ளது