தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஜூலை 31, 2018

நாளை மீண்டும் கட்சித் தலைவர்கள் கூட்டம்! - இழுபறியில் மாகாணசபைத் தேர்தல்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக, ஆராய்வதற்கான கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது. விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தேர்தலை நடத்தும் விதம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில், புதிய எல்லை நிர்ணயங்களுக்கு அமைய களப்பு மற்றும் விகிதாசார முறையின் கீழ் தேர்தலை நடத்துவதா அல்லது பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக நாளை கட்சித் தலைவர்கள் ஒன்று கூடவுள்ளனர்