தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஜூலை 16, 2018

வட மாகாணசபை உறுப்பினரின் தந்தையை தாக்கி விட்டு, வீட்டில் இருந்த பணம், நகைகள் கொள்ளை

வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் உள்ள வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனின் பெற்றோரின் வீட்டுக்குள், இன்று அதிகாலை புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்களைத் தாக்கி, நகை மற்றும் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.

இன்று அதிகாலை 12.30 மணியளவில், வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த மாகாண சபை உறுப்பினரின் தந்தை மீது தாக்குதலை மேற்கொண்டு, தாய் அணிந்திருந்த 6 பவுண் நகை மற்றும் உண்டியலில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துள்ளனர். அத்துடன், வீட்டில் இருந்த மூன்று அலைபேசிகளையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.