தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, ஜூலை 28, 2018

இயக்கச்சி விபத்தில் சிறுமி பலி

கிளி­நொச்சி, இயக்­கச்­சிச் சந்­தியை அண்­மித்த பகு­தி­யில் நேற்று மோட்­டார் சைக்­கிளும், ஹைஏ­எஸ் வாக­னமும், மோதி விபத்­துக்­குள்ளான­தில் 4 வய­துச் சிறுமி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­துள்­ளார். கிளி­நொச்­சி­யில் இருந்து பளை நோக்கி வந்த மோட்­டார் சைக்­கி­ளும், யாழ்ப்பாணத்­தில் இருந்து கொழும்பு நோக்­கிச் சென்ற ஹைஏ­எஸ் வானுமே விபத்­துக்­குள்­ளா­கின.

மோட்­டார் சைக்­கி­ளில் குடும்­ப­மா­கப் பய­ணித்த கண­வன், மனைவி, இரண்டு பிள்­ளை­கள் படு­கா­ய­ம­டைந்­த­னர். அதில் சிறுமி ஒரு­வர் சிகிச்சை பய­னின்றி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­துள்­ளார். பளை வைத்­தி­ய­சா­லைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட பின்­னர் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்ட போதும் சிறுமி உயி­ரி­ழந்­து­ விட்­டார் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. விபத்­துக்­குள்­ளா­ன­வர்­கள் யாழ்­ப­பா­ணம் வத்­தி­ரா­யன் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்