தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஜூலை 16, 2018

கோத்தா- விக்கி சந்திப்பை தடுத்து நிறுத்தியதாம் கூட்டமைப்பு!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னைச் சந்திக்க இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய அவர் சந்திக்க மறுத்து விட்டதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

'இராணுவம் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திக்க வேண்டும் என நான் கேட்டேன். அந்தப் பேச்சுக்கு வடக்கு மாகாண முதல்வர் இணங்கினார். நாள், இடம், நேரமும் ஒதுக்கப்பட்டன. எனினும் சந்திப்புக்கு அரை மணி நேரத்திற்கு முன்னர், விக்னேஸ்வரன் முடியாது என்று கூறிவிட்டார். கூட்டமைப்பின் உயர்மட்டத்தரப்பின் கோரிக்கைக்கு அமையவே அவர் குறித்த சந்திப்பை மறுத்தார் என அவர் மேலும் குறிப்பிட்டார்