தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஜூலை 19, 2018

மன்னார் புதைகுழி - அணைத்தபடி கிடந்த இரு எலும்புக்கூடுகள்

மன்னார் ச.தொ.ச விற்பனை நிலைய வளாகத்தில், இன்று 36ஆவது நாளாகவும் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள்
முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில், நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் இரண்டு ஒருவரை ஒருவர் அணைத்தவாறு அருகருகே ஒன்றாக காணப்பட்டதாக தெரிய வருகிறதுநேற்றும் இன்று காலையும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாகத்தை விரிவுபடுத்தி அகழ்வு செய்யும் பணி இடம்பெற்று வருகின்ற நிலையில், தற்போது அதிர்ச்சி அளிக்க கூடிய விதமாக விரிவுப்படுத்தப்பட்ட இடத்தில் இந்த இரு தினங்களிலும் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நேற்று இப் பணியானது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள், மண்டையோடுகளை வெளியேற்றும் நோக்குடன் துப்புரவு செய்யும் பணி இடம்பெற்றதுடன் இன்றைய தினம் இவ்விடத்துக்கு அருகாமையிலுள்ள நடைபாதையில் ஐந்து அடி ஆளத்திற்கு அகழ்வை விரிவுபடுத்தி அகழ்வுகள் இடம்பெற்றன.
அகழ்வு பணிகளின்போது தொடர்ச்சியாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், இதுவரைக்கும் 40இற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகளும், மண்டையோடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 27 எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பெண்கள் அணியும் காப்பு என சந்தேகிக்கப்படுகின்ற தடயப் பொருள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவரை ஒருவர் அணைத்தவாறு அருகருகே இரு மனித எச்சங்கள் ஒன்றாக காணப்பட்டமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.