தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஜூலை 18, 2018

கறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாளர் கட்சியுடன் சுவிஸ் தமிழ் இளையோர் சந்திப்பு

தொழிலாளர் கட்சியின் அழைப்பை ஏற்று, 16.07.2018, சூரிச் மாநிலத்தில், கறுப்பு ஜூலையை முன்னிட்டு, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் அவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பின் போது ஈழத் தமிழர்களின் பிரச்சனைகள் பற்றியும், தமிழின அழிப்புச்சார்ந்தும் அவர்களுக்கு கூறப்பட்டதுடன், எமது போராட்டத்தின் நோக்கமும் அதன் முக்கியத்துவம் பற்றியும் தகவல்கள் பகிரப்பட்டன.
இச்சந்திப்பின் போது எமது தேசிய உணவுகள், சிற்றுண்டிகள் பகிரப்பட்டு, எதிர்வரும் காலங்களில் எமது போராட்டத்தின் வெற்றிக்கு அவர்களின் உதவியும் ஆதரவும் நிச்சயம் அவசியம் என வலியுறுத்தி ஒன்றுகூடல் நிறைவுபெற்றது.