தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

செவ்வாய், ஜூலை 31, 2018

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்த முடிவு!


வடக்கு, கிழக்கில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 25,000 வீடுகளின் நிர்மாணப்பணிகளை அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பிக்கவும், மேலும் 10,000 வீடுகளின் நிர்மாணப் பணிகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 25,000 வீடுகளின் நிர்மாணப்பணிகளை அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பிக்கவும், மேலும் 10,000 வீடுகளின் நிர்மாணப் பணிகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, 1847 கி.மீ. தூர வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், மயிலிட்டி மீன்பிடித்துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாழைச்சேனை கடதாசி ஆலை, அம்பாறை சீனித்தொழிற்சாலை, நெல் ஆலை ஆகியவற்றை மீண்டும் ஆரம்பிக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி நேற்று ஜனாதிபதி தலைமையில் முதற் தடவையாகக் கூடியது.

இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முறையாகவும் வினைத்திறனாகவும் மேற்கொண்டு மக்களுக்கு துரித நன்மைகளை பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.