தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஜூலை 19, 2018

முன்ஜாமீன் நிபந்தனையை பூர்த்தி செய்ய காலஅவகாசம் கேட்ட பாரதிராஜா மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

முன்ஜாமீன் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய காலஅவகாசம் கேட்டு இயக்குனர் பாரதிராஜா தாக்கல் செய்த
மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
,

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, விநாயகரை இறக்குமதி கடவுள் என்றும், ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு அவமானம் ஏற்பட்டால் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் பேசினார்.

இதுதொடர்பாக கொடுக் கப்பட்ட புகாரின் அடிப்படையில், வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நிபந்தனை அடிப்படையில் பாரதிராஜாவுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதில், சைதாப்பேட்டை கோர்ட்டில் உத்தரவாதம் அளித்து முன்ஜாமீன் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் 3 வாரங்களுக்குள் போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டது.

ஆனால் இந்த நிபந்தனையை பாரதிராஜா நிறைவேற்றவில்லை. இதற்கு கால அவகாசம் வேண்டும் என்று பாரதிராஜா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம், முன்ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றாத பாரதிராஜாவுக்கு ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதற்காக நிபந்தனையை நிறைவேற்றவில்லை? எனறு பாரதிராஜாவின் வக்கீல் பிரபாகரனிடம், நீதிபதி ராஜமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, பாரதிராஜாவுக்கு வயதாகி விட்டது. உடல் நலம் சரியில்லை என்று வக்கீல் கூறினார். நிபந்தனைகளை பூர்த்தி செய்ய இப்போது பாரதிராஜா இளமையாகி விட்டாரா? இப்போது அவரது வயதும், உடலும் ஒத்துழைக்க தயாராக உள்ளதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது, பாரதிராஜா தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் பல தவறுகள் இருப்பதாக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முகமது ரியாஸ் வாதிட்டார்.

இதையடுத்து, இந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், மீண்டும் புதிய மனுவை தாக்கல் செய்வதாகவும், அவரது வக்கீல் பிரபாகரன் கூறினார்.

இதை நீதிபதி ஏற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் தாக்கல் செய்து இருந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.