தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2018

யாழ்ப்பாணத்தில் நேற்று ஒரே நாளில் 11 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு, வீடுகள் மீதான தாக்குதல், மனித அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பிரதேசங்களில் நேற்று நடத்தப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் படி யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் போன்ற பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு விஷேட சோதனை நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் இயங்குகின்ற ஆவா குழு, தனு ரொக் குழு, விக்டர் குழு போன்ற குழுக்களின் உறுப்பினர்களால் கடந்த நாட்களில் பல சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தமை தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ளன. குறைந்த வயதுடையவர்கள் அந்தக் குழுக்களுடன் இணைந்து கொள்வதாகவும், அவ்வாறான குழுக்களை அடக்குவதற்காக கடந்த 01ம் திகதி முதல் விஷேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.