03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2018

ஒரேயொரு டி20 - தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை


சுழற்பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரெயொரு டி20 போட்டி கொண்ட தொடரை இலங்கை அணி வென்றது.
தென்ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை 2-0 எனக்கைப்பற்றியது. அதன்பின் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா 3-2 எனக் கைப்பற்றியது.

இந்நிலையில் ஒரேயொரு போட்டி கொண்ட டி20 தொடர் இன்று நடைபெற்றது. கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களகாக டி காக், அம்லா ஆகியோர் களம் இறங்கினார்கள். அம்லா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் 19 ரன்களும், டி காக் 20 ரன்கள் அடித்தனர். டுமினி 3 ரன்னில் வெளியேற கிளாசன் 18 ரன்களும், டேவிட் மில்லர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்தவர்கள் தொடர்ந்து டக்அவுட்டில் வெளியேற தென்ஆப்பிரிக்கா 16.4 ஓவரில் 98 ரன்னில் சுருண்டது. இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான தனஞ்ஜெயா டி சில்வா (2), அகிலா தனஞ்ஜெயா (2), சண்டகன் (3) பந்து வீச்சில் அசத்தினார்கள்.பின்னர் 99 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பெரேரா ரன்னிலும், மெண்டிஸ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

அதன்பின் வந்த சண்டிமல் மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். டி சில்வா 26 பந்தில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மேத்யூஸ் ரன்ஏதும் எடுக்காமலும், தசுன் ஷனகா 16 பந்தில் 16 ரன்னிலும், திசாரா பெரேரா ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இந்த இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்டது.என்றாலும் சண்டிமல் நிலைத்து நின்று அணியை வெற்றி பெறவைத்தார். இதனால் இலங்கை 16.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது. #