03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், ஆகஸ்ட் 23, 2018

திருச்சி முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது, மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

திருச்சி முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருச்சி முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து 90,000 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதகுகள் உடைந்து தண்ணீர் வெளியேறி வருவதால் கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரியில் திரண்டு வரும் தண்ணீரை தேக்கிவைக்க 1836-ல் திருச்சி முக்கொம்பு அருகே கொள்ளிடத்தின் குறுக்கே மேலணை கட்டப்பட்டது. மதகுகள் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.