தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஆகஸ்ட் 01, 2018

ஈழத்தமிழ் பெண் தமிழக அகதி முகாமில் படுகொலை! அதிர்ச்சியில் ஈழத்தமிழர்கள்!


தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் ஈழத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்த 80 வயதுடைய (சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை) மூதாட்டி கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் சென்னையில் உள்ள கும்புடிபூண்டி அகதிகள் முகாமில், மனநிலை பாதிக்கப்பட்ட மகனுடன் வசித்து வந்த மூதாட்டியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மூதாட்டியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் ஒருவர், அவரைக் கொலை செய்து விட்டு, அங்கிருந்த தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது