தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2018

போதையில் மயங்கிக் கிடந்த மணமகன்! - யாழ்ப்பாணத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்


திருமண நாளன்று மணப்பெண் குடிபோதையில் மயங்கிக் கிடந்ததால், திருமணத்தை மணமகன் நிறுத்திய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த மாதம் 20-ம் திகதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், மன்னாரை சேர்ந்த ஆணுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

திருமண நாளன்று மணப்பெண் குடிபோதையில் மயங்கிக் கிடந்ததால், திருமணத்தை மணமகன் நிறுத்திய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த மாதம் 20-ம் திகதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், மன்னாரை சேர்ந்த ஆணுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருமணம் யாழ்ப்பாணத்திலுள்ள பெண் வீட்டில் இடம்பெறவிருந்த நிலையில், மாப்பிள்ளை யாழ். நகரிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நண்பர்களுடன் தங்கியிருந்தார். திட்டமிட்டபடி 20-ம் திகதி காலை குறித்த பெண் திருமணத்துக்கு தாயாராகியிருந்த நிலையில், வெகு நேரமாகியும் மாப்பிள்ளை திருமணத்துக்கு வரவில்லை, தொலைபேசி அழைப்புக்கும் பதிலில்லை, என்ன நடந்திருக்குமோ என்ற பதற்றத்தில் பெண்ணின் உறவினர்கள் விடுதிக்கு சென்று பார்த்த பொழுது அவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

மாப்பிள்ளை மது போதையில் மயங்கிக் கிடந்தார், எழுப்பியும் எழும்பவில்லை, வேறுவழியின்றி மீண்டும் பெண் வீட்டுக்கு சென்ற உறவினர்கள் நடந்த சம்பவத்தை பெண்ணுக்கும், பெண் வீட்டாருக்கும் கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண் சிறிது நேரத்தின் பின் திருமணத்தை நிறுத்துமாறு பெற்றோரிடம் கூற பெண்ணின் விருப்பப்படி திருமணம் நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் திருமணத்துக்கு சென்ற உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.