தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஆகஸ்ட் 01, 2018

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்களுக்கு வழியில் நேர்ந்த கதி

அனுராதபுர – புத்தளம் பிரதான வீதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்றும் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்து, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிலரே குறித்த வானில் இருந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.