03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2018

வடக்கு அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்! - ஆளுநர்


வட மாகாண சபை அமைச்சர்கள் அனைவரும் பதவியில் இருந்து விலகி, புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்ய வேண்டும் என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
எந்தவொரு மாகாண சபையிலும் ஐந்து அமைச்சர்களே இருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை அடுத்து வடமாகாண சபையில் ஆறு அமைச்சர்கள் இருக்கின்றனர். இதன் காரணமாக வட மாகாணத்தின் நிர்வாகத்திற்கான சட்ட திட்ட கொள்கைகளை கூட வகுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பா. டெனிஸ்வரனை மீண்டும் அமைச்சுப் பதவியில் இருக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக அனைத்து அமைச்சர்களும் பதவி விலகி விட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்க வேண்டும். அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கோ அல்லது பதவி நீக்குவதற்கோ எனக்கு அதிகாரம் இல்லை என்பதால் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இந்தப் பிரச்சினையை விரைவாக தீர்க்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.