புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2018

சமஷ்டித் தீர்வை நோக்­கியே செல்­கின்­றது தமி­ழ­ர­சுக் கட்சி வட­மா­காண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம்

இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்சி ஆரம்ப காலத்­தில் இருந்து தற்­போ­து­வரை கூட்டாட் சித்(சமஷ்டி) தீர்வை நோக்­கியே
பணிக்­கின்­றது. அதை எந்­தச் சந்­தர்ப்­பத்­தி­லும் நாம் கைவி­ட­வில்லை.
இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார் வடக்கு மாகாண சபை அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம்.
தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அம­ரர் வி.நாக­நா­த­னின் நினை­வு­தின நிகழ்­வு­கள் நேற்று நடை­பெற்­றன. யாழ்ப்­பா­ணம், மார்ட்­டின் வீதி­யில் உள்ள தமி­ழ­ர­சுக் கட்சி அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்ற நிகழ்­வில் உரை­யாற்­றும்­போதே வடக்கு மாகாண அவைத் தலை­வர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் தெரி­வித்­ததா­வது:-
எந்த இடத்­தி­லும் நாம் கூட் டாட்சித் தீர்­வைக் கைவி­ட­வில்லை. அவ்­வாறு கூற­வு­மில்லை. எமது ஆரம்­ப­கால உறுப்­பி­னர்­கள் எம் இனத்­தின் விடு­த­லைக்­கா ­கப் பல போராட்­டங்­களை ஜன­நா­யக ரீதி­யில் முன்­னெ­டுத்­தார்­கள். அம­ரர் நாக­நா­த­னும் பல அகிம்­சைப் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­ட­வர் – என்­றார்.
நிகழ்­வில் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை சோ.சேனா­தி­ரா­சா­வும் உரை­யாற்­றி­னார். அவர் தெரி­வித்­ததா­வது,
எமது இன விடு­த­லைக்­காக நாம் போரா­டி­ய­போது, தனி நாடு கோரு­கின்­றோம் என்று அரசு எம்­மைச் சிறை­ யில் அடைத்­தது. நீண்ட நாள்­க­ளா­கப் பிணை வழங்­கப்­ப­டாது விளக்­க­ம­றி­யில் வைக்­கப்­பட்­டி­ருந்­தோம். அப்­போது நீதி­ப­தி­யாக வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ ­ரன் இருந்­தார். அவ­ரால் எனக்­கும், என்­னு­டன் இருந்த காசி ஆனந்­த­னுக்­கும் பிணை கிடைத்­தது.
நாம் பல போராட்­டங்­களை இனத்­துக்­காக முன்­னெ­டுள் ளோம், முன்­னெ­டுத்து வரு­கின்­றோம். கூட்டாட்சித் தீர்­வுக்­காக ஆரம்ப காலத்­தில் இருந்து போரா­டும் கட்சி எமது கட்சி மட்­டும் தான். நாம் தொடர்ந்து போரா­டு­வோம் – என்­றார்.
நிகழ்­வில் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை முதல்­வர் இ.ஆர்னோல்ட், கட்சி உறுப்­பி­னர்­கள் எனப் பலர் கலந்து கொண்­ட­னர்.

ad

ad