தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஆகஸ்ட் 02, 2018

வன்முறைக் குழுக்களை கைது செய்யும் வரை பொலிசாருக்கு விடுமுறை இல்லை


யாழ். குடாநாட்டில் வன்முறையில் ஈடுபடும் குழுக்களை கைது செய்யும் வரை பொலிஸாருக்கான விடுமுறைகள் காலவரையறையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோ அறிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் வன்முறையில் ஈடுபடும் குழுக்களை கைது செய்யும் வரை பொலிஸாருக்கான விடுமுறைகள் காலவரையறையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோ அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விடுமுறை காலவரையறையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவின் வாள்வெட்டு மற்றும் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

காரணமின்றி பல வீடுகள், வன்முறையாளர்களினால் தாக்கப்பட்டுள்ளது. கிராம அலுவலகருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுடன், கிராம அலுவலரின் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் ஆவா குழு மற்றும் ஏனைய குழுவினர் உட்பட வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களை கைதுசெய்வதற்கான பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கைகள், மோட்டார் சைக்கிள் ரோந்துகள் என்பன பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த திடீர் அறிவிப்பினை சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இயங்கும் வன்முறைக் குழுவினரை விரைந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் பணித்துள்ளார்.

அத்துடன், வன்முறைச் சம்பவங்களை புரிவதற்காக ஒன்று கூடும் இடங்களையும், அநாவசியமாக வீதிகளில் நடமாடும் இளைஞர்களையும் கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்துமாறும், பணித்து நான்கு பொலிஸ் நிலைய பொலிஸாரின் விடுமுறைகளை காலவரையறையின்றி வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிறுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.