தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஆகஸ்ட் 01, 2018

முழங்காவில்-விளையாடிய போது கழுத்தில் கயிறு இறுகி சிறுவன் பலி

கிளிநொச்சி, முழங்காவில், அன்புபுரம் பிரதேசத்தில் நேற்று 13 வயது சிறுவன், விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத வகையில் கழுத்தில் கயிறு இறுகி பலியானார். மூன்று பெண் சகோதரிகளுக்கு மூத்தவரான, குறித்த சிறுவன் பாடசாலை முடித்து வீடு திரும்பி தங்கைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொய்யா மரம் ஒன்றில் விளையாடுவதற்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் கழுத்து இறுகியே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் சகோதரிகள் தாயாரிடம் தெரிவித்ததையடுத்து, கயிற்றில் சிக்கியிருந்த சிறுவனை மீட்டு முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.