03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2018

ஆவா குழுவில் மகன் - மீட்டுத் தருமாறு கதறிய தாய்

ஆஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை மீட்டுத் தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். வாள்வெட்டு, வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்ணான்டோ தலைமையில் வாகன பேரணி ஒன்று நடத்தப்பட்டு தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன.

ஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை மீட்டுத் தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். வாள்வெட்டு, வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்ணான்டோ தலைமையில் வாகன பேரணி ஒன்று நடத்தப்பட்டு தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன.

இதன் பின்னர் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பில் வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். இதன்போது கருத்து தெரிவித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர்,

குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு யாழ். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன. கணிசமான முறைப்பாடுகளும் தகவல்களும் இதன் மூலம் எமக்கு கிடைத்துள்ளன. குறிப்பாக தாய் ஒருவர் அண்மையில் என்னை தொடர்பு கொண்டு தனது மகன் ஆவா குழுவினருடன் இணைந்து செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.

அவரை காப்பாற்ற தான் முயன்றும் முடியாது போனதாக தெரிவித்த தாய், எப்படியாவது அவனை அந்த குழுவிலிருந்து காப்பாற்றி தம்மிடம் ஒப்படைக்குமாறு முறைப்பாடு செய்துள்ளார்.இதைப்போன்று பல தகவல்கள் எமக்கு கிடைத்து வருகின்றது, அவற்றை இரகசியமான முறையில் விசாரித்து நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.