தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஆகஸ்ட் 02, 2018

முதலமைச்சர் வேட்பாளரை ஒன்றுகூடி முடிவெடுப்போம், குழப்பம் வராது! - என்கிறார் மாவை

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதையும், அதனை எப்போது அறிவிப்பது என்பதையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை உரிய நேரத்தில் ஒன்றுகூடி அறிவிக்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதையும், அதனை எப்போது அறிவிப்பது என்பதையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை உரிய நேரத்தில் ஒன்றுகூடி அறிவிக்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.

'வட மாகாண சபை முடிவடைவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது. கிழக்கு மாகாண சபை முடிவடைந்துள்ளது. இத்தகைய சபைகளுக்கான தேர்தல் எப்போது நடக்கும் என்பது தொடர்பில் இன்னும் உறுதியான முடியு எடுக்கப்படவில்லை. இவ்வாறான சூழலில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பலரும் பலவிதமான கருத்துக்களை கூறிவருகின்றார்கள். கூட்டமைப்பின் கட்சிகளுக்குள்ளும் இவ்வாறான கருத்துக்கள் வெளிவருகின்றன.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் தேர்தல் அறிவிக்கப்படும்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் உரிய நேரத்தில் உரியவாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் ஒன்றுகூடி முடிவுகளை எடுப்பார்கள்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளால் எவ்விதமான குழப்பங்கள் வரமாட்டாது எமது மக்களுக்கு செய்யவேண்டியதை உரிய முறையில் செய்வோம் போலிக்குற்றச் சாட்டுக்களை மக்கள் முன்வைக்கமாட்டோம். எமது மக்களுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வு அபிவிருத்தி போன்ற விடையங்களில் நாங்கள் பல சிரத்தையுடனே செயற்பட்டு வருகின்றோம் என்றார்.