புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஆக., 2018

விடுதலைப்புலிகள் மீள் உருவாகல் தொடர்பில் இரத்தத்தில் கையொப்பமிடத் தயாராகும் அமைச்சர்!

நாட்டில் மீண்டும் ஒரு தீவிரவாதம் தோற்றம் பெறாது என தன்னால் இரத்தத்தில் கையொப்பமிட்டு கூற முடியும் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சூளுரைத்திருக்கின்றார்.


நாட்டில் வாழும் தமிழின மக்களுக்கு மீண்டும் யுத்தமொன்றினை ஏற்படுத்தும் தேவையொன்று தான் அங்கம் வகிக்கும் தேசிய அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அமைச்சர் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வதாக மஹிந்தவாதிகளும், கோட்டாவாதிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதேவேளை இந்த நடவடிக்கைகள் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாக்கப்படும் ஆபத்து இருப்பதுடன், மீண்டும் யுத்தமொன்று வெடிக்கலாம் என்றும் அவர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர்.

எனினும் மொனராகல மாவடடத்தின் எம்பிலிப்பிட்டடிய கொளொன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உறையாற்றிய தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, நாட்டில் மீண்டும் யுத்தமொன்று வெடிக்காது என்று அடித்துக்கூறினார்.

“இன்று நடைமுறையிலுள்ள நல்லாட்சிஅரசாங்கத்தின் மீது வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற திட்டமிடுவதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் மேலோங்க வழி வகுப்பதாகவும் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடமளிப்பதாகவும் குற்றம் சுமத்தி வருகின்றனர். வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதனூடாகவோ அல்லது வேறு நடவடிக்கைகள் ஊடகவோ தீவிரவாதத்தை மீள உருவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில்

ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என நான் மிகுந்த பொறுப்புடன் இரத்தத்தில் கையொப்பமிட்டு தெரிவிக்க விரும்புகின்றேன்.தேவையற்ற பீதியை யாரும் உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவையில்லை. நாம் பல இடங்களுக்கும் செல்கின்ற போது வடக்கில் நிலையற்ற தன்மையொன்றுநிலவுகின்றது எனவும் இராணுவ முகாம்களை அகற்றுவதனால் மீண்டும் யுத்தம் வெடிக்கும் எனவும் தெரிவித்து மக்கள் மத்தியில் பீதியை

உருவாக்குகின்றமை தெரியவருகிறது. எனினும் அவ்வாறுஎந்தவொரு சம்பவமும் இடம்பெறாது. வடக்கின் மக்களுக்கு மீண்டும்

யுத்தத்தில் ஈடுபடுவதற்கான எந்தவொரு தேவையும் இல்லை. தீவிரவாதஅரசியல்வாதிகள் இங்கும் உள்ளனர் அங்கும் உள்ளனர். வடக்கில்சிவாஜிலிங்கம் மற்றும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர்

மாகாண சபை பலத்தைக் கைப்பற்றியதும் வேறுவழியின்றி இவ்வாறுஇனவாதத்தையும் தீவிரவாதத்தையும் பற்றி கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர். ஆனால் இன்று எந்தவொரு தமிழ் மக்களுக்கும் நாட்டில்மீண்டும் யுத்தமொன்றினை நிர்மானித்துக் கொள்வதற்கானதேவையொன்று இல்லை என்பதோடு அவ்வாறான சூழ்நிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்த இடமளிக்காது என்பதையும் உறுதுியாககூறிக்கொள்கின்றேன். நாம் இந்த பொய்களுக்கு ஏமாற்றமடையாமல் இருப்பது அவசியம்” என்றும் தெரிவித்தார்.

ad

ad