03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், ஆகஸ்ட் 27, 2018

வடக்கில் கடும் வரட்சி - மூன்றரை இலட்சம் பேர் பாதிப்பு!

வரட்சியான காலநிலையால், வடக்கு மாகாணத்தில்,சுமார் ஒரு இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த, 3 இலட்சத்து 47 ஆயிரத்து 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இடர் முகாமைத்துவ நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது-

வரட்சியான காலநிலையால், வடக்கு மாகாணத்தில்,சுமார் ஒரு இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த, 3 இலட்சத்து 47 ஆயிரத்து 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இடர் முகாமைத்துவ நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது-

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வரட்சியுடனான வானிலை காரணமாக, ஒரு இலட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் இதில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களே, அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தில் ஒரு இலட்சத்து 741 குடும்பங்களைச் சேர்ந்த, 3 இலட்சத்து 47 ஆயிரத்து 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் அதில் கிளிநொச்சி மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 33 ஆயிரத்து 165 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 735 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் , கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பச்சிளம்பள்ளி ஆகிய பகுதிகளே, அதிகளவில் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனவெனவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் 30 ஆயிரத்து 404 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவித்துள்ளதுடன், யாழ்ப்பாணம், காரைநகர், ஊர்காவற்றுறை, வேலணை, சாவகச்சேரி, உடுவில், சண்டிலிப்பாய், கோப்பாய், நெடுந்தீவு உள்ளிட்ட பல பகுதிகள் வரட்சியால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மன்னார் மாவட்டமும் வரட்சியால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி, அந்த மாவட்டத்தில் 29 ஆயிரத்து 421 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஆயிரத்து 737 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.