தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஆகஸ்ட் 01, 2018

ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா ஆதரவு அளிக்கும்! - விக்கியிடம் உறுதியளிப்பு

.
  
இலங்கை தொடர்­பாக ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு அமெ­ரிக்கா தொடர்ந்­தும் ஆத­ர­வ­ளிக்­கும் என்று, இலங்­கைக்­கான அமெ­ரிக்­கப் பதில் தூது­வர் ரொபேர்ட் ஹில்­ரன், வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்­கும், பதில் தூது­வ­ருக்­கும் இடை­யி­லான சந்­திப்பு கொழும்­பில் நேற்று இடம்­பெற்­றது. இந்­தச் சந்­திப்­புத் தொடர்­பில் அமெ­ரிக்­கப் பதில் தூது­வர் தனது ருவிட்டரில் “ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் 2015, 2017ஆம் ஆண்­டு­க­ளில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை இலங்கை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு அமெ­ரிக்கா தொடர்ந்­தும் ஆத­ர­வ­ளிக்­கும் என்று உறு­தி­ய­ளித்­துள்­ளேன் என்­றுள்­ளது.” குறிப்பிட்டுள்ளார்.