புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2018

புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தார் பேரறிவாளன்? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திருப்பம்


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு கட்டமாக, பேரறிவாளன் கடல் கடந்து இலங்கைக்கு சென்று, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை சந்தித்துள்ளதாக மத்திய புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரி தியாகராஜன் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகளின் போதே இந்த விடயங்கள் வெளியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விசாரணைகளின் போதே மறைந்திருக்கும் பல விடயங்கள் வெளியாகியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பேரறிவாளன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளதாக மத்திய புலனாய்வு பிரிவினர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.

பேரறிவாளன் சிவராசனுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளமை, அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்தமை, விடுதலைப் புலிகள் அமைப்பு உறுப்பினர்களுடன் இணைந்திருந்தமை, இந்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் கூட்டங்களுக்கு பிரசன்னமாகியமை, விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களை பெற்றுக் கொடுத்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை இந்திய மத்திய புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் முன்னிலையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், பேரறிவாளன் கடல் கடந்து இலங்கைக்கு சென்று, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்தித்துள்ளதாகவும் மத்திய புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலூர் கோட்டை பகுதிக்கு விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் பேரறிவாளன் சென்று, அவர்களுடன் தங்கியிருந்துள்ளதாகவும் மத்திய புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இவ்வாறான காரணங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் பட்சத்தில், பேரறிவாளன் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை மிக நீண்டகாலமாக பேணி வந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள

ad

ad