புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2018

முன்னணியுடன் கூட்டு வைப்பது குறித்தும் சிந்திப்பேன்! - முதலமைச்சர் விக்கி

வட மாகாண சபைத் தேர்தலில் எவருடன் கூட்டுச் சேருவது என்பதை தேர்தல் காலத்திலேயே தீர்மானிப்பேன் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை கைதடியில் உள்ள வட மாகாண பேரவை செயலகத்தில், குடாநாட்டு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இக் கலந்துரையாடலையடுத்து, 'தம்முடன் கூட்டு சேர்ந்து அடுத்த மாகாண சபை தேர்தலில் போட்டியிட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள கோரிக்கைக்கான பதில் என்ன என்று செய்தியாளர்கள் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், 'என்னை பலரும் அடுத்த மாகாண சபை தேர்தலில் போட்டியிட தம்மோடு வருமாறு அழைக்கின்றார்கள். ஆனால் இது தொடர்பாக நான் அந்த நேரத்திலேயே முடிவெடுப்பேன். அத்துடன் தற்போது அடுத்த மாகாண சபை தேர்தலை எப்போது நடத்துவது என முடிவில்லாத நிலையில் அதற்கு இன்னமும் ஆறு ஏழு மாதம் தாமதமாகலாம். எனவே இது தொடர்பாக சிந்திப்பதற்காக நீண்ட காலம் இருக்கிறது. இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியுடன் நான் கூட்டு வைப்பதா- இல்லையா என்பது தொடர்பாக சிந்திப்பேன் என்றார்.

ad

ad